‌அஸ்ஹர் பாடசாலையின் ‌பாடசாலையின் அமைதியை தொடரவிடுங்கள்

‌அஸ்ஹர் பாடசாலையின் ‌பாடசாலையின் அமைதியை தொடரவிடுங்கள்

0
SHARE

 

அக்குறனை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான தளபாடங்களை பெற்றுக் கொள்வதற்காக பெற்றோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் மூலம் புதிதாக பாடசாலைக்கு இணையும் மாணவர்களிடம் குறிப்பிட்ட தொகைப் பணம் பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க அறவிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஒரு பெற்றோர் இதை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிட்டதோடு, பாடசாலைக்கு பெற்றோர் குழு வருகை தராத சந்தர்ப்பத்தில் அப்பணத்தை பிரதி அதிபரிடம் ஒப்படைப்பதாக வந்துள்ளார்.

அவ்வேளையில் அவருடன் அவருடைய சகோதரி வேடத்தில் வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பட்ட பிரதி அதிபரை கைது செய்துள்ளார்.

பாடசாலைக்கு எதிராக செயற்படும் குறிப்பட்ட சில சதிகாரர்களின் திட்டமிட்ட சதியினாலேயே பிரதி அதிபர் மாட்டி விடப்பட்டுள்ளார்.

இவ்வாறு சமுகத்தை காட்டிக்கொடுக்கின்ற கேவலமான வேலையே செய்த சதிகாரர்களுக்கு எதிராகவும், அப்பாவியான பிரதி அதிபரை விடுதலை செய்யக் கோரியும் பாடசாலையின் அனைத்து ஆசிரிய ஆசியைகளும், கல்வி சாரா ஊழியர்களும் 24-01-2017 செவ்வாய்கிழமை அன்று பாடசாலை விட்ட பின் மாபெரும் கவன ஈர்ர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் மேற்கொண்டனர்.

யா அல்லாஹ் இச் சதியை மேற்கொண்டவர்களுக்கு இவ்வுலகிலேயே அதற்கான தண்டனையை வழங்குவதோடு அவர்களை இச் சமுகத்திற்கு அடையாளப்படுத்துவாயாக
ஆமீன

16265997_1741715292809417_1705322317991566407_n 16266139_1741715289476084_1730868506018357915_n 16298886_1240955689327596_5219210431258592793_n

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY