றோன் கருவியை பயன்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க மற்றும் சட்டவிதிகள்

றோன் கருவியை பயன்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க மற்றும் சட்டவிதிகள்

0
SHARE

றோன் புகைப்படக்கருவியை பயன்படுத்தும் பொழுது அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் சட்டவிதிமுறைகள் உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு நடைபெறவுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தினால் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு 2017-01-31ம்திகதி அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
ஊடக வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் விமானிகள் அற்ற றோன் புகைப்படகருவி (Unmanned Aerial Vehicles UA Vs) மூலம் காணொளிக்காட்சிகளை பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம் வேகமாக விரிவடைந்து வருகின்றது. இதற்கமைவாக இந்த றோன் புகைப்படக்கருவி பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்தி சேகரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு ஊடக நிறுவனங்களும் சமூக ஊடக வலைப்பின்னல் மூலமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்தோடு தயாரிப்பு நடவடிக்கைகளின் போதும் இடர் சந்தர்ப்பங்களின் போதும் இவ்வாறான தனிப்பட்ட தேவைகளுக்கான பல்வேறு தரப்பினர் பல்வேறு நபர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை பரவலாக காணக்கூடியதாகவுள்ளது.
புதிய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததை போன்று தற்பொழுது விமானம் தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை இந்த புகைப்படக்கருவியை பயன்படுத்துவதற்கு இலகுவாக அமைந்துள்ளது.
இதனால் விமான சேவைகள் அதிகார சபையின் ஒத்துழைப்புடன் புகைப்படக்கருவியை பயன்படுத்துவதற்கான ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் சட்டவிதிகள் குறித்து ஊடகவியலாளர்கள் மற்றும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான செயலமர்விற்கு அரச தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்வதற்காக www.news.lk மற்றும்www.dgi.gov.lk என்ற இணையத்தளங்களினூடாக பதிவுசெய்ய முடியும். இதற்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாத்திரமே தெரிவுசெய்யப்படவுள்ளனர். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY