முதன் முறையாக “நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)” செயற்றிட்டம்

முதன் முறையாக “நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)” செயற்றிட்டம்

0
SHARE

இலங்கையில் முதன் முறையாக “நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)” செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டல்களின் கீழ் கப்பற்துறையுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுமென வணிக கப்பற் சேவைகள் செயலகத்தின் அத்தியட்சக ஜெனரால் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் உறுப்பு நாடாகும். அதன் அடிப்படையில் சர்வதேச போக்குவரத்து தொடர்பாக கொள்கைகள் காணப்படுகின்றன. எனவே நாம் அக் கொள்கைகளை பின்பற்ற கடமைபட்டுள்ளோம். அதன் அடிப்படையில் உயிர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளிற்கேற்பவே நாம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்புதிய சட்டம் யூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இச்செயற்றிட்டம் ஒக்டோபர் மாதம் முதல் உத்தியோகப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும். இலங்கை சர்வதேச சந்தை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொழுது ஏற்றுமதி செய்கின்ற ஒவ்வொரு பொருளினதும் நிறையை உறுதிப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் நாம் ஒரு செயன்முறையினை உருவாக்கினோம்’ என அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

சர்வதேச சமுத்திரவியல் நிறுவனமானது (IMO) 1974 ஆம் ஆண்டு சர்வதேச வணிக கப்பற்துறையில் பின்பற்றப்பட வேண்டிய பொது சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் இலங்கை முகவராக வணிக கப்பற் சேவைகள் செயலகம் செயற்படுகின்றது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனமாகவே வணிக கப்பற் சேவைகள் செயலகம் செயற்படுகின்றது.

சமுத்திரவியல் சந்தை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் அதனுடன் தொடர்புடைய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதே இந் நிறுவனத்தின் செயற்பாடாகும். அதன் அடிப்படையிலேயே ‘நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)’ எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொள்கலன்களை கொண்டுச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை அதிகரித்தல் , கப்பல்களின் ஸ்திரத்தன்மையினை மற்றும் நடுநிலை தன்மையினை பாதுகாத்தல்,

கொள்களன்களை உரிய முறையில் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதிப்புக்களை குறைத்தல் ஆகியனவற்றை குறிக்கோளாகக் கொண்டு இக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதன் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குவதற்குரிய வழிக்காட்டல்கள் மற்றும் அறிவுறுத்தகள் உள்ளடங்கிய செயன்முறையினை வணிக கப்பற் சேவைகள் செயலகம் பொது மக்களிற்கு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளது

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY