தகவல் அறியும் சட்டமூலம் 21 ஆம் திகதி

தகவல் அறியும் சட்டமூலம் 21 ஆம் திகதி

0
SHARE

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பிலான முதலாவது வாசிப்புக்காக கடந்த மார்ச் 24 ஆம் திகதி இது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்குகள் பெற்று தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் அன்றைய தினம் விவாதம் நடத்தப்பட்டு சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது நீண்டநாள் செயற்பாடாக இருந்தது. அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Government News Portal of Sri Lanka

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY