நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கப்பல் இலங்கைக்கு!

நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கப்பல் இலங்கைக்கு!

0
SHARE

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவென பங்களாதேஷ் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டவது தொகுதி நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தை நேற்று முந்தினம்(05) வந்தடைந்த பங்களதேஷ் கடற்படைக்குச் சொந்தமான “பங்கபந்து” என்ற கப்பலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் போது பங்களாதேஷ் அராங்கத்தின் சார்பில் இலங்கைக்கான பங்களதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஹஸன், இலங்கை அரசின் சார்பில் கலந்து கொண்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ். எஸ். மியனவலவிடம் உத்தியோகபூர்வமாக இப் பொருட்களை கையளித்தார்.

சுமார் 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 110 மெற்றிக் தொன் எடையுள்ள அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களே இதன் போது கையளிக்கப்பட்டது. பங்களதேஷ் அரசாங்கம் தனது உடனடி மற்றும் முதற்கட்ட நிவாரணமாக விமானம் மூலம் கடந்த மாதம் 27ஆம் திகதி 10 மெற்றின் தொன் எடையுள்ள அத்தியாவசிய நிவாரண பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையிலேயே பங்களதேஷ் கடற்படைக்குச் சொந்தமான மிகப் பாரிய கப்பலான “பங்கபந்து” என்ற கப்பலில் 110 மெற்றிக் தொன் எடையுள்ள நிவாரண பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பங்களதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஹஸன் தெரிவித்தார்.

3000 நீர் சுத்திகரிக்கும் இயந்திரம், 28 ஆயிரம் சாரிகள், 17 ஆயிரம் லுங்கிகள், 50 ஆயிரம் சிறுவர் உடைகள், 10 ஆயிரம் ரி சேர்ட்கள், 30 ஆயிரம் பெண்கள் பயன்படுத்தும் சுகாதார நப்கின்கள், 1000 ரெயின் கோட், 500 நுளம்பு வலை, பெருந்தொகை மருந்து பொருட்கள் 40 ஜெனரேட்டர்கள், 1180 கூடாரங்கள் மற்றும் சிறுவர் உணவு வகைகள் என்பனவே இதில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பங்களதேஷத்திற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானதும் பலமானதுமாகும் இந்நிலையிலேயே பிரதமர் சேக் ஹஸீனாவின் ஆலோசனைக்கமைய இந்த நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பொருட்களை கொடுப்பதன் மூலம் மாத்திரம் ஈடு கொடுக்க முடியாது எனினும் எம்மால் முடியுமான உதவிகளை நாங்கள் செய்துள்ளோம். இந்த நிவாரண பொருட்களை உரிய முறையில் கொண்டு சேர்த்த எமது கடற்படையினருக்கும் அதற்கு உதவியாக இருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சு, கடற்படையினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இலங்கையும் பங்களதேஷ் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியாக இது போன்ற அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நாடாகும். தமது நாடு இது போன்ற பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் எமக்கு உதவ முன்வந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ். எஸ். மியனவல தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மேற்கு கடற் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கே. கே. ஜே. டி சில்வா, இலங்கையிலள்ள பங்களதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு இணைப்பாளர் கொமடோர் அஸ்லம் பர்வேஷ் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

http://tamil.news.lk/news

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY