பொலித்தீன் பைகளுக்கு பதிலாக புடவை பைகள்!

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக புடவை பைகள்!

0
SHARE

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக புடவைகளினால் தயாரிக்கப்பட்ட துணிப்பைகள் கடந்த வெள்ளிக்கிழமை(03) காத்தான்குடி பிரதேச செயகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இந்த புடவை பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா, கிராம உத்தியோகத்தருக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமலேஸ்வரன் மற்றும் கணக்காளர் சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி எஸ்.பரமானந்தம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் இன்று பொலித்தீன் பாவனையினால் நமது சுற்றாடல் பாதிக்கப்படுகின்றது. அதனால் நாம் பல்வேறு சுற்றாடல் தாக்கங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனால் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்ய வேண்டும்.  அதற்குப்பதிலாக புடவையினால் செய்யப்பட்ட பைகளை பாவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

BPK/LDA_dmu_batti

Read 6 times

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY