அரணாயக்க பிரதேச செயலகப் பிரிவிற்கு 1000 வீடுகள்

அரணாயக்க பிரதேச செயலகப் பிரிவிற்கு 1000 வீடுகள்

0
SHARE

கேகாலை, அரணாயக்க பிரதேச செயலாளர் பிரிவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 1000 வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரணாயக்க பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரணாயக்க பிரதேச செயலகப் பிரிவில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 61 கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.

எவ்வித பாரபட்சமுமின்றி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்த  அமைச்சர், அரணாயக்க பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வீட்டுப் பிரச்சினையை முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான திலிப் வெதஆராய்ச்சி, சம்பிக்க பிரேமதாச, இந்திக்க பண்டாரநாயக்க உட்பட அரசியல் தலைவர்கள், மாவட்டச் செயலாளர் டப்ளியு. எம். அபேவிக்கிரம, உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

AR/dmu-kegalle

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY