காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம்?????

காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம்?????

0
SHARE

நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (26) மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது எனவும் இம் மழையுடன் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு ஊவா மாகாணங்களில் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் அதிகளவிலான மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் காற்று பலமாக வீசக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், கடற்கரை பிரதேசத்தில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென், கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். அனைத்து கடலோரங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும், இடி முழக்கம் மின்னல் தாக்கமும் அதிகரித்து காணப்படுவதனால் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

BPK

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY