பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் குண்டு வெடிப்பு

பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் குண்டு வெடிப்பு

0
SHARE

30 பேர் உயிரிழப்பு 250 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்-

பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் இடம்பெற்ற மூன்று தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 250 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துக்குள்ளாகியுள்ளனர் என வௌிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசெல்ஸ் ‘சவென்டம்’ (Zaventem) விமான நிலையத்தின் உட்செல்லல் பகுதியில் சில விநாடி வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரு குண்டுத் தாக்குதல்களும், மால்பீக் ரயில் நிலையத்தில் மற்றுமொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் என தொடர்ந்து மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சவென்டம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியாகியுள்ளன. விமான நிலைய சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ள படத்தில் 3 இளைஞர்கள் கை தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.

இவர்களில் வலது பக்கத்தில் இருப்பவன் விமான நிலைய தாக்குதலின் போது தாக்குதலில் பங்குபற்றவில்லை. சற்று பதட்ட நிலையுடன் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் தப்பி ஓடிவிட்டதாகவும் அவனை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை தாங்கள் தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. விமான நிலையத்தில் 14 பேரும், ரயில் நிலையத் தாக்குதலில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்கான சகல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. பெல்ஜியம் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று(22) பெல்ஜியத்தின் உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்கு முதலாவது குண்டுத் தாக்குதல் விமான நிலையத்தில் நடத்தப்பட்டது. உட்செல்லல் பகுதியில் பதிவுகளை மேற்கொள்ளும் மேசைக்கு அருகிலேயே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சில நொடி வித்தியாசத்தில் இரண்டு பாரிய வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும், அரபுமொழியில் கூச்சலிடுவதும் கேட்டதாகவும் விமான நிலையத்திலிருந்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று 79 நிமிடங்களின் பின்னர் (உள்ளூர் நேரம் 09.19) ஐரோப்பிய ஒன்றிய கட்டடத்துக்கு அருகில் உள்ள ‘மால்பீக்’ ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு தாக்குதல்களையும் தற்கொலைத் தாக்குதல்கள் என அடையாளம் கண்டிருக்கும் பெல்ஜிய பாதுகாப்புப் பிரிவினர், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸின் தலைநகர் பரிஸில் 130 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாகவிருந்த குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் என கருதப்படும் Salah Abdeslam கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே பெல்ஜியத்தை உலுக்கும் வகையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சனநடமாட்டம் மிகுந்த பெல்ஜியத்தின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

“இது தான் துன்பங்களும் கஷ்டங்களும் நிறைந்ததொரு கறுப்பு நாள்” என பெல்ஜியத்தின் பிரதமர் சார்ள்ஸ் மிஷேல் (Charles Michel) தெரிவித்துள்ளார். பிரான்சுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான எல்லையில் மேலும் 225 மேலதிக துருப்புக்கள் பாதுகாப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளத

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY