அரிசியின் நுகர்வினை அதிகரிப்பதற்கே பாணின் விலையில் ஏற்றம்

அரிசியின் நுகர்வினை அதிகரிப்பதற்கே பாணின் விலையில் ஏற்றம்

0
SHARE

அரிசியின் நுகர்வினை அதிகரிக்கும் பொருட்டே கோதுமை மாவின் இறக்குமதி சலுகைகள் நீக்கம் செய்யப்பட்டு, பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் மோதர மற்றும் கிரான்ட் பாஸ் பிரதேசத்திலுள்ள இரண்டு ஆலயங்களின் அபிவிருத்திப் பணிக்கு தேவையான நிதியினை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கான கையிருப்புக்களும் உள்ளது. அரிசிக்கான உற்பத்திச் செலவீனமும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே எமது விவசாயிகளுக்கு நன்மைகளை வழங்குவது எமது பொறுப்பாகும்.

அரிசியின் நுகர்வினை அதிகரிப்பதன் மூலமே இதனை செய்ய முடியும். அத்துடன் சர்வதேச சந்தைகளில் மாவின் விலை குறைக்கப்பட்டமையும் இத்தீர்மானத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆகவே தான் அரிசியின் நுகர்வினை அதிகரிக்குமாறு விவசாயிகள் ஊடாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து அவர்களை தைரியப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BPK

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY