உலகின் பணக்காரர்கள் பட்டியலில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில்!

0
SHARE

போர்ப்ஸ் பத்திரிகையின் வருடாந்த கணிப்பின் படி இவ்வாண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்தும் மூன்றாவது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் தொடர்ந்து மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (75 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன்) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டொலர் குறைந்துள்ளது. இவர் கடந்த 22 ஆண்டுகளில் 17 ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து 2 ஆவது இடத்தினை ஸ்பானிஷ் வர்த்தகர் அமென்சியோ ஒர்டேகோ (67 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெற்றுள்ளதுடன், மூன்றாவது இடத்தினை முதலீட்டாளர் வொரன் பவட் (60.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பிடித்துள்ளார்.

மேலும் சுமார் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தனது சொந்த வருமானத்தின் மூலம் இவ்வருடத்துள் அதிகரித்து கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பேர்க், இந்த ஆண்டு 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடத்தினை விடவும் இவ்வருடம் 16 பேர் குறைவாக உள்ளனர். கடந்த ஆண்டில் 197 பெண்கள் பங்குபற்றிய இப் பட்டியலில் இவ்வருடம் 190 பெண்கள் பங்குபற்றியுள்ளனர்.

இவர்களில் 540 பேர் அமெரிக்காவையும், 251 பேர் சீனாவையும், 120 பேர் ஜேர்மனியையும் சேர்ந்தவர்களாவார். அத்துடன் இவர்களில் முதல் 10 பணக்காரர்களது மொத்த பணப்பெறுமதி 505.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

போர்ப்ஸ் பத்திரிகையின் கணக்கின் படி உலகின் முதல் 20 பணக்காரர்கள்

பில்கேட்ஸ்
அமென்சியோ ஒர்டேகோ
வொரன் பவட்
கார்லொஸ் சிலிம் ஹேலு
ஜெப் பிஷோஸ்

மார்க் சக்கர் பேக்
லாரி எலிசன்
மைக்கல் புலும்பேர்க்
சார்ள்ஸ் கோச்
டேவிட் கோச்

லிலிஆனே பெற்றன்கோர்ட்
லாரி பேச்
சேர்ஜேய் பிரின்
பேர்னாட் ஆர்னோல்ட்

ஜிம் வோல்ரன்

அலிஸ் வோல்ரன்
எஸ்.ரொப்சன் வோல்ரன்
வாங் ஜியான்லின்
ஜோர்ஜ் பௌலோ லெமான்
லி கா – சிங்

BPK

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY