குளியாப்பிட்டி சிறுவனுக்கு எச்.ஐ.வி. இல்லை: நிபுணர் தெரிவிப்பு

குளியாப்பிட்டி சிறுவனுக்கு எச்.ஐ.வி. இல்லை: நிபுணர் தெரிவிப்பு

0
SHARE

இலங்கையில் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவிலுள்ள பள்ளிக்கூடமொன்றில், முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பரவிய வதந்தியைடுத்து மூடப்பட்ட பள்ளிக்கூடத்தை, நாளை நடைபெறவிருக்கும் உயரதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பள்ளிக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய போதிய அறிவு இலங்கை மக்களுக்கு இருக்கின்றபோதிலும், வீண் பயமும் வதந்தியுமே குளியாப்பிட்டிய சம்பவத்திற்கு பிரதான காரணமாக அமைந்ததாக தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டாக்டர் வீரசிங்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இலங்கையில் இருக்கின்றனர் எனவும், அவர்கள் முறையாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அவர்களால் பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எச்.வி.ஐ. தொற்று வதந்தியால் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்புவதை தவிர்த்துள்ள மக்களுக்கு மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் டாக்டர் வீரசிங்க கூறினார்.

bbc

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY