உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை பெப் 1 – 29 வரை!

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை பெப் 1 – 29 வரை!

0
SHARE

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk  என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை அவர்களாகவே பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சைகள் திணைக்களம், தபால் பெட்டி இல 1503, கொழும்பு. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

The Official Government News

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY