டின் மீனுக்கான வரி 100 ரூபாவால்அதிகரிப்பு!

டின் மீனுக்கான வரி 100 ரூபாவால்அதிகரிப்பு!

0
SHARE

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கான (மெக்கரல்) விஷேட பண்ட வரி 100 ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நுகர்வோர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காக மெகரல் மீன் இறக்குமதிக்காக விதிக்கப்பட்ட விசேட வரி விலக்கினை தேசிய மெகரல்; மீன் உற்பத்திக்கு மாத்திரம் வழங்குவதற்கும், டின் மீன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி விலக்கினை தேசிய டின் மீன் உற்பத்திக்கு மாத்திரம் வழங்குவதற்கும் மீன்பிடி மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

 

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY