தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 1.1 சதவீதத்தினால் அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 1.1 சதவீதத்தினால் அதிகரிப்பு!

0
SHARE

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 1.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. அமர சதரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்னை அறிவித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. அமர சதரசிங்க வெளியிட்டுள்ள செய்தியில் டிசம்பர் மாதத்திற்கான வருடாந்த பணவீக்கம் 4.2% வீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கடந்த நவம்பர் மாதத்திற்கான அந்தப் பெறுமதி 4.8% ஆகப் பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2015 டிசம்பர் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 113.2 என வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் சுட்டெண்னை நவம்பர் மாதச் சுட்டெண்னுடன் (112.0) ஒப்பிடுமிடத்து 1.2 சுட்டெண் அதிகரிப்பு மற்றும் 1.1 என்ற வீதாசார அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதற்காக உணவுத் தொகுதியின் பெறுமதியில் 0.9% மற்றும் உணவல்லாத் தொகுதியின் பெறுமதியில் 0.1% அதிகரிப்பு தாக்கம் செலுத்தியுள்ளது.

2015 நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யுமிடத்து டிசம்பர் மாதத்திற்கான உணவுத் தொகுதியின் பெறுமதி அதிகரிப்பு மாற்றத்திற்காக காய்கறிகள், பச்சை மிளகாய், அரிசி, புதிய மீன், யோகட், முட்டை, தேங்காய், வெள்ளைப்பூடு மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தாக்கம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பெரிய வெங்காயம், எலுமிச்சை, உருளைக் கிழங்கு, நெத்தலிக் கருவாடு, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு,  மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பால்மா ஆகிய உணவுப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2015 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுமிடத்து டிசம்பர் மாதத்திற்காக உணவு தவிர்ந்த பொருட் தொகுதியின் பெறுமதி மாற்றத்தில் 0.1% அதிகரிப்பைக் காணக் கூடியதாகவுள்ளது. இந்த உணவு தவிர்ந்த தொகுதியின் பெறுமதி மாற்ற அதிகரிப்புக்காக ‘மதுக் குடிவகைகள்’ மற்றும் ‘போக்குவரத்து’ ஆகிய தொகுதிகளுக்குரிய பொருட்களின் விலை அதிகரிப்பு தாக்கம் செலுத்தியுள்ளது.

‘போக்குவரத்து’ தொகுதியின் பெறுமதி அதிகரிப்பில் விமானப் போக்குவரத்துக் கட்டணங்களின் அதிகரிப்பு முழுமையாகத் தாக்கம் செலுத்தியுள்ளது. ‘வீடு, நீர், மின்சாரம், வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்’ ஆகிய தொகுதிகளில் வீழ்ச்சியைக் காட்டுவது L.P வாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியாகும் எனவும் தெரிவித்தார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY