பல்கலைக்கழகத்தில் தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு!

பல்கலைக்கழகத்தில் தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு!

0
SHARE

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியிலுள்ள சர்ஷாதா (Charsadda) பல்கலைக்கழகத்தின் மீது ஆயுததாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வௌிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

எனினும் எத்தனை ஆயுததாரிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. இதுவரை ஆயுததாரிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் எவரேனும் பணயக்கைதிகளாக பிடிபட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை. தற்போதும் தாக்குதல் நடவடிக்கை பல்கலைக்கழகத்தினுள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை நடைபெறுகின்ற நிகழ்வுக்காக பல்கலைக்கழகத்திற்கு 3000 மாணவர்களுக்கும் 600 விருந்தினர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்கள் அனைவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY