அரச ஊழியர்கள் அநாவசியமான முறையில் தமது கடமை நேரத்தில் தொலைபேசி பாவிக்கின்றனர்!

அரச ஊழியர்கள் அநாவசியமான முறையில் தமது கடமை நேரத்தில் தொலைபேசி பாவிக்கின்றனர்!

0
SHARE

(வத்துகாமம் நிருபர்)
அரச ஊழியர்கள் அநாவசியமான முறையில் தமது கடமை நேரத்தில் தொலைபேசிகளைப் பயன் படுத்தவதால் பொதுமக்கள் சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரம் விரயமாவதாகவும் அதனைப் பயனுள்ள வகையில் மாற்றி அமைக்கத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்றும் அரச, மாகாண அரச சேவைகள் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்படி சங்கம் அரச காரியாலயங்கள் பலவற்றில் கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இது உறுதியாகுவதாகவும் அது தெரிவித்துள்ளது. தமது ஆய்வின் போது அரச சேவைகள், பகுதி அரச சே‌‌வ‌ை‌கள், உள்ளுராட்சி, மாகாண சபைகள், மத்திய அரசு போன்ற பல திணைக்களங்கள் மற்றும் நியதிச் சபைகள் போன்றவற்றில் தொழில் புரியும் கனிஷ்ட, சிரேஷ்ட, இடைத்தரம், நிறைவேற்றுத் தரம் போன்ற பல்வேறு தரப்பினரிடையேயும் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரு நாள‌ை‌க்கு அரச ஊழியர்கள் குறைந்தது 8 மணிநேரம் கடமை செய்ய வேண்டியவர்களாக இருந்த போதும் 60 சதவீதமானவர்கள் 2 மணித்தியாலங்களை கையடக்கத் தொலை பேசியில் கழிப்பதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாரம் 10 மணித்தியாலங்களும் மாதம் 40 மணித்தியாலங்களும் வீணாவதாக கண்டறியப்பட்டுள்ளது என மேற்படி அமைப்பின் செயலாளர் அஜித் கே. திரகரத்ன தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் –
கையடக்கத் தொலைபேசியூடாக பொதுமக்களுக்கு போதிய சேவைகள் இலகுவாகக் கிடைக்க வேண்டிய ந‌ே‌ரத்தில் துரதிஷ்ட வசமாக இன்று சில அதிகாரிகள் அதனை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இதனால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்‌‌காெள்ளுவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களைத் தொடர்பு க‌ாெண்டு வினைத்திறன் உள்ள ஒரு துறையாக அரச துறையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY