இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை திடீர் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை திடீர் அதிகரிப்பு!

0
SHARE

இன்று (13) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை ஒரு ரூபாவினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

நேற்று (12) இடம்பெற்ற சங்கத்தின் கலந்துரையாடலை அடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

அதன்படி, தற்போது ரூபா 54 ஆக இருந்த 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூபா 55 ஆக அதிகரித்துள்ளது.

பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவியிருந்த நிலையில் சங்கத்தின் அங்கத்தவர்கள் கூடி அது குறித்து ஆராய்ந்ததாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

ரூபா 5 இனால் பாண் உள்ளிட்ட பல்வேறு பேக்கரி தயாரிப்புகளின் விலை அதிகரிக்கப்படும் என அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The Official Government News Portal of Sri Lanka

 

 

 

 

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY