றக்பி தொடரில் தொடர் வெற்றிகள் கண்டி ‌அணிக்கு

றக்பி தொடரில் தொடர் வெற்றிகள் கண்டி ‌அணிக்கு

0
SHARE

இலங்கை றக்பி சம்மேளனம் நடாத்தும் டயலொக் கேடயத்திற்கான முதற்தரக் கழகங்களுக்கு இடையிலான றக்பி போட்டித் தொடரில் கண்டி விளையாட்டுக் கழகம் இப்பருவத்தில் தோல்வி அடையாத அணியாகப் பதிவானது. கடற்படை விளையாட்டுக் கழகத்தை 29 – 10 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி ஈட்டியது.

இப்போட்டி கண்டி நித்தவல றக்பி விளையாட்டு மைதானத்தில் (10.1.2016) இடம் பெற்றது. இரு அனிகளும் கடும் சவால்களை எதிர்கொண்டன.

கண்டி விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்ட 29 புள்ளியை 2 கோல்களும் 5 பெனல்டி மூலம் பெற்றது. இதில் நைஜில் ரத்வத்தை 24 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். அவர் 5 பெனல்டி ஒரு ட்ரை 2 ட்ரைக்கான மேலதிகப் புள்ளி மூலம் இவை பெறப்பட்டன.

கண்டி விளையாட்டு அணி சார்பில், நைஜில் ரத்வத்த, கயான் வீரரத்ன ஆகியோர் பெற்றனர். கடற்படை விளையாட்டு கழகம் சார்பில் திலின வீரசிங்க 1 ட்ரை, தினேஷ் சந்திமால் 1 ட்ரொப் கோல், மற்றும் 1 கொன்வேசன் மூலம் 10 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தனர்

இப் போட்டியின் முதற் பாதி முடிவில் 15 -10 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாகத்திலும் திறமையாக விளையடிய கண்டி அனியினர் மேலும் 14 புள்ளிகளை தமது அணிக்கு சேர்த்ததுடன் கடற்படை அணியினருக்கு புள்ளிகள் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இர்சாத் காதர் போட்டிக்கு மத்தியஸ்த்தம் வகித்தார்.

இப் போட்டியை கண்டு கழிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சமூகம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY