2016 முதல் ‌அக்குறனையில் சிகரட் விற்பனை செய்ய முடியுமா?

2016 முதல் ‌அக்குறனையில் சிகரட் விற்பனை செய்ய முடியுமா?

0
SHARE

அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஒரு பிரதேச வர்த்தகர்கள் இதன் பிறகு சிகரட் வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளனர்.
அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த துனுவில என்ற இடத்திலிருந்து பங்கொல்லாமடை என்ற முஸ்லிம் கிராமம் வரையிலான பகுதியில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் சிகரட் மற்றும் புகைத்தல் தொடர்பான சகல பொருட்களையும் விற்பனை செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மேற்படி நடவடிக்கையை முன் எடுக்கத் தீர் மானித்துள்ளதாக பிரதேச வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் லின்டன் சேனாரத்ன தெரிவித்ததாவது

இப் பிரதேச வியாபாரிகள் சுயமாகவே முன் வந்து சிகரட் உற்பட அனைத்து புகையிலை உற்பத்திகளையும் விற்பதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இப் பிரதேசத்தில் சுமார் 30 வர்த்தக நிலையங்கள் இருப்பதாகவும் அந்நிறுவனங்களிலிருந்து வருடத்திற்கு 52 இலட்சம் ரூபாய் வரையிலான சிகரட் விற்பனையாவதாகவும் அவர் தெரிவித்தார்.

வியாபாரிகளின் தீர்மானப்படி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இப் பிரதேசத்தில் சிகரட் விற்பனை முற்றாக நிறுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பதிப்புரிமை ‌அற்றது

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY