இனி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்ட அரசியலமைப்பு

இனி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்ட அரசியலமைப்பு

0
SHARE

அரசியலமைப்புச் சபை அமைப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றில் இன்று (09) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, லஷ்மன் கிரியெல்ல, ரவுப் ஹக்கீம், மலிக் சமரவிக்கிரம, டி. சுவாமிநாதன், கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ, பாடலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து இம்முன்மொழிவை முன்வைத்துள்ளனர்.

 

அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட இம்முன்மொழிவில், இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் உள்ளனர். ஜனநாயகம் சக்தி பெற்ற கலாசாரத்தை உருவாக்க மக்கள் ஆணை கிடைத்துள்ளமையினால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்ட அரசியல் முறை ஒழிக்கப்பட்ட அரசியலமைப்பை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தௌிவான அறிவிப்பு கிடைத்துள்ளது. மேலும் தேர்தல் முறையை செயற்படுத்தலுடன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூடிய அரசியலமைப்புச் சபை என்ற பாராளுமன்ற செயற்குழுவொன்று அவசியம் என்ற முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.

 

இவ்வரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். பிரதி தலைவர்கள் 7 பேர் நியமிக்கப்படுவார். அரசியலமைப்ப சபையின் 20 சந்திப்புக்கள் வைக்கப்படவேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY