உடனடி விலை ‌அதிகரிப்புகள்!

உடனடி விலை ‌அதிகரிப்புகள்!

0
SHARE

சிகரெட், மது மற்றும் கசினோ வரி அடங்கலாக வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட வரிகள் நேற்று (01) முதல் அமுலுக்கு வருவதாக உள்நாட்டு வருமானவரித் திணைக்களம் தெரிவித்தது. இதனூடாக அரசாங்கத்துக்கு 9200 கோடி ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி தேசிய கட்டுமான வரி, மதுசார புகையிலை வரி, கசினோ வரி என்பவற்றுக்கு 25 வீதத்தால் மிகைவரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய கட்டுமான வரி அதிகரிப்பின் ஊடாக 9000 கோடி ரூபா வருமானமும், மதுசாரம், புகையிலை மற்றும் கசினோ வரி அதிகரிப்பின் மூலம் 200 கோடி ரூபா வருமானமும் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 4 வீதம் வரை திருத்தப்பட்டிருப்பதுடன், இதனூடாக 90,000 மில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிகரெட், மதுபானம், சூதாட்டம் அற்ற சமூகமொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே இவற்றின் மீது 25 வீத மிகைவரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்படுத்துவதன் ஊடாக 2000 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வற் வரி திருத்தம், காணி (உரிமை மாற்றத்தை மட்டுப்படுத்தல் சட்டம்) என்பவற்றின் ஊடாகவும் அரசாங்கம் கூடுதல் வரி வருமானத்தை எதிர்பார்க்கிறது.

இதேவேளை, வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய கடவுச்சீட்டுப் பெறுவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வயது வந்தவர்களின் ஒரு நாள் சேவை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான கட்டணம் 10,000 ரூபாவாகவும், சிறுவர்களுக்கு 5000 ரூபாவாகவும், வயது வந்தவர்களுக்கான வழமையான சேவைக் கட்டணம் 3000 ரூபாவாகவும், சிறுவர்களுக்கு 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.

நன்றி – தினகரன்

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY