அவசரமாக 200 வைத்தியர்கள் தே‌வை!

அவசரமாக 200 வைத்தியர்கள் தே‌வை!

0
SHARE

(வத்துகாமம் நிருபர்)

மத்திய மாகாண வைத்திய சாலைகளில் வைத்திய அதிகாரிகளுக்கு தட்டுப் பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த லக்கலை பல்லேகம வைத்திய சாலையில் டாக்டர்கள் இல்லாத காரணத்தால் சில தினங்கள் சகல வைத்திய நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், பின்னர் ஒரே ஒரு வைத்தியர் மட்டும் சேவைக்கு வந்திருந்தமைபற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் மத்திய மாகாண வைத்திய சாலைகளுக்கு குறைந்தது 200 வைத்தியர்கள் மேலும் தேவைப் படுவதாகத் தெரிவித்தனர்

பின்தங்கிய பிரதேசங்களில்; சேவை செய்வதற்கு வைத்தியர்கள் போதிய ஆர்வம் காட்டாமையும் மேற்படி பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லக்கலை பல்லேகம வைத்திய சாலை தவிர்ந்த அதே பிரதேசத்திலுள்ள ஹசலக்க, வேரகஸ்யாய, அம்பகஸ்யாய, கொலன்கொடை, வில்கமுவ, ஹந்துன்கமுவ போன்ற இடங்களிலும் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேற்படி அனைத்து வைத்திய சாலைகளும் கண்டி, மாத்தளை மாவட்ட எல்லையில் பின்தங்கிய பிரதேசம் ஒன்றின் அடுத்தடுத்து ஒரே தொடராக உள்ள வைத்திய சாலைகளாகும்.

இது தவிர அதிகமான சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் விடுமுறையில் செல்லும் போது அக்காரியாலயங்கள் மூடப்படும் நிலைக்கு உள்ளாகின்றன. பதிற்கடமைகளுக்கான ஒழுங்குகள் இல்லை எனவும் தெரிவிக்கப் படுகிறது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY