ஆப்கானிஸ்தான் நில ‌‌அதிர்வால் கண்டி நகரத்தில் ஏற்பட்ட பாதிப்பு!

ஆப்கானிஸ்தான் நில ‌‌அதிர்வால் கண்டி நகரத்தில் ஏற்பட்ட பாதிப்பு!

0
SHARE

கண்டிப்பிரதேசத்தில் உணரப்பட்ட பூமி அதிர்வுகள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில அதிர்வின் தாக்கமாக இருக்கலாம் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கள் இரவு (28.12.2015) சுமார் 10.15 மணியளவில் கண்டி மெதமஹநுவரைப் பிரதேசங்களில் இது உணரப்பட்டது. இது பற்றி பேராதனை பல்கலைக்கழக பூகற்புவியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனி பண்டார தெரிவிக்கையில் அதிர்வலைகளின் தாக்கம் இவ்வாறு பாதிப்புச் செலுத்துவதாகக் கூறினார்.

பல்லேகலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் கிழக்குப் பகுதியில் மெததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் இது உணரப்பட்டுள்ளதாக புவியில், சுரங்க அகழ்வு செயலணியின் விஞ்ஞானியான மகிந்த செனவிரத்ன இது பற்றித் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள எல்லைக்கிராமங்களான எல்லேபொல, வெவேகம, நிதுலேமட, மாபேரிதென்ன, கும்புக்கந்துறை, ஹாரகம, செனரத்வெல போன்ற பிரதேச மக்கள் இதன் தாக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY