குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்குச் செல்ல வந்த ஐவர் மரணம்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்குச் செல்ல வந்த ஐவர் மரணம்!

0
SHARE

கண்டி, கொழும்பு பிரதான பாதையில் வரகாபொல தும்மலசூரிய பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

(30.12.2015) அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற இவ்விபத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் இருந்து வந்த வேன் ஒன்றும் கொழும்பிலிருந்து பொலன்னருவை சோமாவதி நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து எற்பட்டதுள்ளதாக வரகாபொல பொலீசார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர்களில் வேன் சாரதியும் ஒரு குழந்தையும் மேலும் மூன்று பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவாகனங்களிலும் இருந்து காயமடைந்த 22 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர். இவர்கள் வரகாபொல, கேகாலை, வத்துப்பிட்டிவெல முதலான வைத்திய சாலைகளில் அனுமதிக்ப்பட்டதாகத் தெரிய வருகிறது.

வேனில் பயனித்தவர்கள் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்குச் செல்ல வந்தவர்கள் சிலரும் இருந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY