பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல்!

பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல்!

0
SHARE

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தினருகே இன்று (28) பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதலொன்று நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையம் அருகே இன்று காலை வேளையில் மர்ம நபர் ஒருவர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு சிறிய ரக பஸ் வெடித்துச் சிதறியது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 13 பேர் காயமடைந்ததாக காபூல் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆயினும் தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானின் பல்வேறு பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11 ஆம் திகதி அங்குள்ள ஸ்பெயின் தூதரகத்தின் விருந்தினர் மாளிகை மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY