வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடவில்லை

வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடவில்லை

0
SHARE

இலங்கை இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் கனிமத்தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையிலான ஒரு கலந்துரையால் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் கனிமத் தொழிலாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இரத்தினக்கல் அகழ்வின்போது இரத்தினக்கற்களை பிரித்தறிவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய இயந்திரம் தொடர்பிலும் இங்கு ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வேறுபடுத்தப்பட்ட இரத்தினக்கற்களும் ஜனாதிபதியின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டதோடு, இவ்வியந்திரத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்த தேவையான உதவிகளைப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது

இப்புதிய கண்டுபிடிப்பு தொடர்பில் முழுமையான ஒரு அறிக்கையையும் இத் தொழில்துறையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வரும் ஜனவரி அரையிறுதிப் பகுதியில் தமக்கு அறிக்கை ஒன்றை வழங்குமாறும் ஜனாதிபதி அப்பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஜனாதிபதி, எந்தவொரு வெளிநாட்டுக் கம்பனிக்கும் நாட்டில் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அது தமது தேர்தல் வாக்குறுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர, இரத்தினக்கல் கனிமத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சரத் ஆனந்த, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY