கொழும்புத் துறைமுகம் வான் மூலமாக கண்காணிக்கப்படுகின்றது !

கொழும்புத் துறைமுகம் வான் மூலமாக கண்காணிக்கப்படுகின்றது !

0
SHARE

பலன் பெறும் வகையில் நிலத்தை முகாமைத்துவப்படுத்தும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு துறைமுகம்  வான் மூலமாக கண்காணிக்கப்பட்டது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் இக் கண்காணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி பொருளாளரின் செயலாளர் திருமதி சந்திரா ஏக்கநாயக்க , சுங்க திணைக்கள பணிப்பாளர்நாயகம் சூலானந்த பெரேரா , அரச வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சோமசிங்க,  துறைமுக அதிகாரியின் முகாமைத்துவ பணிப்பாளர் சரத் குமார பிரேமசந்திர உள்ளடங்கலாக அரசாங்க அதிகாரிகள் பங்கு கொண்டார்கள்.

இறக்குமதி பொருட்களை பரிசோதிக்கும் பொருட்டு கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் கருவிகளை பொருத்துவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்வதே இக்கண்காணிப்பு நடவடிக்கைகளின் பிரதான குறிக்கோளாகும்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியளவில் இவ் ஸ்கேன் கருவிகளை கொழும்பு துறைமுகத்தில் உரிய  இடத்தில் பொருத்த வேண்டும். அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பொருட்களும் ஸ்கேன் பரிசோதனைக்குட்படும். இச்செயன் முறையின் மூலமாக இந்நாட்டிற்குள் கொண்டு வருகின்ற அனைத்து பொருட்களையும் பரிசோதிக்கும் செயன்முறை இலகுவாக்கப்படும்.

மேலும் இப்பரிசோதனைகள் மூலமாக இந்நாட்டிற்குள் கொண்டுவரப்படும் சட்டவிரோ பொருட்களை அடையாளங் காண்பது இலகுவாக்கப்படுமெனவும் எதிர்பார்கப்படுகின்றது

‌அரச தகவல் தி‌‌‌ண‌ை‌க்களம்

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY