இனி இலகுவாக வாகனங்கள் இறக்குமதி செய்யலாம்!

இனி இலகுவாக வாகனங்கள் இறக்குமதி செய்யலாம்!

0
SHARE

எமது நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அனைத்து உதிரிப்பாகங்களையும் உள்ளடக்கிய வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் போது குறித்த வாகன உற்பத்தி நிறுவனம் மூலம் வழங்கப்படுகின்ற விலைப் பட்டியலையே வாகன கொள்வனவாளர்கள் முன்வைக்க வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தனியார் துறையினருக்கு அடுத்த வருடத்தில் இருந்து 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 கொடுப்பனவில் முதல் கட்டமாக 2500 ரூபாவினை அவர்களது அடிப்படை சம்பளத்துடன் சேர்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஏழு வருடத்துக்கு பின்னர் அடிப்படை வேதனத்துக்கு அதிக தொகையான சம்பளம் இணைக்கப்பட்டமை இதுவே முதன் முறையாகும். இதுவரையில் அரசாங்கத்தின் சொத்து 76 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதனை 100 பில்லியன் வரை உயர்த்த வேண்டிய தேவை உண்டு. இன்றேல் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரச வருமானத்தில் 43% ஓய்வூதியத்திற்கும், ஊழியர்களின் சம்பள கொடுப்பனவிற்கும், கடன் மற்றும் வட்டிக்காக வேண்டி 58% உம் செலவிடப்படுகின்றது.

மீதமானவைகளை செய்ய வேண்டியது கடன் மூலமாகவே என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இம்முறை வரவுசெலவு திட்ட விவாதத்துக்காக வேண்டி முன்னொரு போதும் இல்லாதது போன்று நேரம் வழங்கப்பட்டதாகவும், அவ்வாறான சமூக கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட்டதாகவும் மற்றும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இவ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‌அரச தகவல் தி‌‌ணைக்களம்

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY