Helping Hands அனுச‌ரனையில் சமூக வலைதளங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புனர்வு !

Helping Hands அனுச‌ரனையில் சமூக வலைதளங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புனர்வு !

0
SHARE

சமூக ஊடகங்கள் இன்று மக்களுக்கு மிக அண்மித்த வினைத்திறன் கூடிய ஊடகம் ஒன்றாக மாறி இருப்பதாக விடிவெள்ளி ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் தெரிவித்தார்.
(19.12.2015) கண்டி, பொல்கொல்லை கூட்டுறப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஊடகச் செயலமர்வின் அவர் இதனைத் தெரிவித்தார். ஹெல்பிங் ஹேன்ஸ் அமைப்பின் அனுசரனையுடன் யங்பிரண்டஸ் அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்
சமூக ஊடகங்கள் இன்று மக்களுக்கு மிக அண்மித்த வினைத்திறன் கூடிய ஊடகம் ஒன்றாக மாறி இருப்பதாக அவர் அங்கு தெரிவித்தார். ஊடகம் என்னும் போது தகவல் பரிமாற்றம் ஒன்று நிகழ்கிறது. அச்சு ஊடகம், இலத்தரனியல் ஊடகம் என்ற இரு பிரதான பகுதிகள் இருப்பதாகவும் அவற்றில் இலத்தரனியல் ஊடகங்களின் சமூக வளைத்தளங்களது தாக்கம் இன்று உலகில் பாரிய மாற்றத்தை எற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நவீன சமுக அமைப்பில் சமூக வளைத்தளங்களில் பணி மிகப்பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றி ஊடகவியலாளர்களில் ஜே.எம். ஹாபீஸ் முன்னைய ஊடக அமைப்பை விட இன்று அது இலகு படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY