புதிய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சுங்கத்திணைக்களத்திற்கு 65 பில்லியன் ரூபா வருமானம்

புதிய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சுங்கத்திணைக்களத்திற்கு 65 பில்லியன் ரூபா வருமானம்

0
SHARE

புதிய ஆட்சி வந்ததன் பின்னர் சுங்கத்திணைக்களத்திற்கு 65 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் எதனோல் போன்ற பொருட்களை எவ்வித வரியுமின்றி கொண்டு வர ஜனாதிபதி முதற்கொண்டு உயரதிகாரிகள் தொலைப்பேசியில் அழைப்பை மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தனர். பொதுமக்களின் அத்தியவசிய பொருட்களுக்கு பாரிய வரியை விதித்தனர். ஆனால் இன்று அந்நிலை மாறியுள்ளது. ஒழங்கான முறையில் வரிவிதிப்பு செய்யப்பட்டமையினால் இன்று அதிக வருமானம் பெற்றுகொள்ள முடிந்தது.

நூறுநாள் திட்டத்தில் நாம் அரசை அமைத்த போது நிதியின்றி எவ்வாறு கொண்டு செல்ல போகிறோம் என்று எதிர்தரப்பினர் எண்ணினர். சரியான முறையில் வரிவிதிப்புக்களை மேற்கொண்டமையினாலேயே அதற்கான வருமானம் கிடைத்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

AR

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY