பக்தாத்தில் 25 வருடத்தின் பின்னர் மீண்டும் சவுதி தூதரகம்

பக்தாத்தில் 25 வருடத்தின் பின்னர் மீண்டும் சவுதி தூதரகம்

0
SHARE

சவுதி அரேபியா 25 வருடகாலமாக ஈராக்கில் மூடப்பட்டிருந்த தனது தூதரகத்தை நேற்று (16) மீண்டும் பக்தாத்தில் திறந்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஈராக் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுசைன் குவைத் மீது படையெத்து ஆக்கிரமித்தார். இதனால் தனது நாட்டுக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் கொண்ட சவுதி ,  ஈராக்குக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் யுத்தத்தில்  முக்கிய பங்கு வகித்தது.

சவுதியில் இருந்துதான் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகள் யுத்தத்தை நடத்தின. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் ஈராக்கில் அமெரிக்கா களம் இறங்கிய நிலையில் இருநாடுகளிடையே உறவு புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவு மேம்பட்டது.

இதன் பின்னர் சவுதியில் ஈராக் தூதரகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுதி தூதரக அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பரில் ஈராக் விசா வழங்கியது. தற்போது கால் நூற்றாண்டுக்குப் பின்னர் ஈராக்கில் சவு திஅரேபியா தனது தூதரகத்தைத் திறந்துள்ளது. முதல் கட்டமாக சவுதி தூதரக அதிகாரிகள் 35 பேர் கொண்ட குழு பக்தாத் சென்றுள்ளது. பக்தாத்தைத் தொடர்ந்து குர்திஷ்தான் மாகாணத்தின் எர்பில் நகரிலும் சவுதி தூதரகங்கள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

AR

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY