நாய் குட்டிகளுடன் உறங்குகிறேன்.‌‌‌அழுது புலம்பும் வ‌யோதிபத் தாய்

நாய் குட்டிகளுடன் உறங்குகிறேன்.‌‌‌அழுது புலம்பும் வ‌யோதிபத் தாய்

0
SHARE

நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி உயர் பதவியில் அமர்த்திய தாய் ஒருவர் தன்னை தனது பிள்ளைகள் கைவிட்டுள்ளதாகவும் நாயுடன் உறங்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் (14.12.2015) கலேவலைப் பொலீசில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-
பானந்துறை தென்மாதுபிட்டிய, பானகம்வ என்ற இடத்தில் வசித்த ஆர்.எம்.ரொசலின் என்ற 88 வயது மூதாட்டியே இவ்வாறு புகார்தெரிவித்துள்ளார். தனது புதல்வன் வங்கி ஒன்றில் தொழில் புரிவதாகவும் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ் வண்டியில் தன்னை ஏற்றிட்டதாகவும் தான் தற்போது இவ்வாறு இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் பொலீசாரிடம் தெரிவித்துள்ளார். தனது மற்றைய இரண்டு ஆண் பிள்ளைகள் பொலீஸில் தொழில் புரிவதாகத் தெரிவித்துள்ளதுடன் தனது ஒரே மகள் ஓய்வு பெற்ற ஆசிரியை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு தான் மூன்று முதியோர் இல்லங்களில் வசித்ததாகவும் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள தனது மகனின் வீட்டில் சில தினங்கள் இருந்ததாகவும் மற்றைய மகனின் வீட்டுக்கு செல்லும்படி இவ்வாறு தனது மகன் பஸ்சில் ஏற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் எனைய பிள்ளைகளின் வீடுகளிலும் அவ்வப்போது வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படியான நிலையில் நாய் குட்டிகள் உறங்கும் மெத்தை தனக்குத் தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு நாய்களுடன் உறங்க வேண்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.
கலேவலைப் பொலீசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY