இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்கள் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்கள் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

0
SHARE

இந்தியாவின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்புகளுக்கான 180 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கலாசார உறவுகளுக்கான இந்தியப் பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இளமாணி, முதுமாணி, மற்றும் கலாநிதிப்பட்டங்களை இந்தியாவில் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கண்டி இந்து கலாச்சார நிலையம் அறிவித்துள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் 180 புலமைப்பரிசில்கள் வழங்கப்ட உள்ளன. மருத்துவத்துறை தவிர்ந்த ஏனைய துறைகளில் இது வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தகுதியானவர்களை விண்ணப்பிக்கும் படி கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இளமாணி கற்கைகளான பொறியில், ஞாபகார்த்த, வர்த்தகம், பொருளியல், மனிதப் பண்பியல், மற்றும் அழகியற்கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்காக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுமாணிக் கற்கைகளுக்கு மேலே குறிப்பிட்ட அதே பாடத்துறைகளில் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொறியில், விஞ்ஞானம், மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன் உரிமை அளிக்கப் படும். ஆனால் வைத்தியம், சுதேச வைத்தியம் போன்ற துறைகள் உள்ளடக்கப்பட வில்லை.
ரஜீவ்காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தகவல் தொழில் நுட்பத்துறை, பொறியியல் இளமாணியும் தொழில் நுட்ப இளமானியும் பெற்றுக் கொள்வதற்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுமாணி மற்றும் கலாநிதிப்பட்டங்களுக்காக மருத்துவம் தவிர்ந்த துறைகளில் ஆய்வு செய்வதற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு திறமை அடிப்படையில் இலங்கைப்பிரஜைகளை இதற்காகக் தெரிவு செய்ய உள்ளது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைப்படி தெரிவுகள் இடம் பெறும், இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைகளைத் தொடர வசதியளிக்கப்படும்.
www.mohe.gov.lk எனும் முகவரியில் விண்ணப்பங்களைப் பெறலாம்.
தகுதியாக ஆர்வமுள்ள மலையக பெருந்தோட்ட மாணவர்கள் 0777 326462 எனற தொலைபேசி இலக்கத்துடன் அல்லத பொன். இராஜநாதன், இந்து கலாசார நிலைய கல்வி உபகுழு, 348, பேராதனை வீதி, கண்டி என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தேவையான விபரஙகளைப் பெற முடியும் என கண்டி இந்து கலாச்சார நிலையம் அறிவித்துள்ளது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY