இலங்கையில் பரவுகிறது புதிய நோய்!மக்கள் ‌அவதானமாக இருக்கவும்

இலங்கையில் பரவுகிறது புதிய நோய்!மக்கள் ‌அவதானமாக இருக்கவும்

0
SHARE

குணப்படுத்தக் கூடிய சரியான வழி முறை தெரியாத ஒருவகை சர்ம வியாதி நாடுமுழுவதிலும் பரவி வருவதாக பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் எஸ்.எம்.குலரத்ன தெரிவித்தார். (2015.12.13)
கண்டி, கெட்டம்பேயில் இடம் பெற்ற ஒரு செயலமர்விலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
சுற்றாடலில் பரவலாகக் காணப்படும் நுண்னுயிர் ஒன்றால் இந்த சர்ம நோய் பரவுவதாகவும், ஆரம்பத்தில் தோலில் தழும்பு ஏற்பட்டு பின்னர் அது உடலெங்கும் பரவுவதாக கூறினார்.
Leishmaniasis (லெஸ்மெனியசிஸ்) என அறியப்பட்டுள்ள இந்த நோய்க்கு மணல் ஈ (SAND FLIES) என்ற இழையான் வகையினால் பரவுவதாக அவர் மேலும் தெரிவித்தார். முதன் முதலாக கிழக்குக் கரையோரத்திலே இது இனம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நமது அண்டைய நாடான இந்தியாவிலும் இந்நோய் பரவியுள்ளதாகவும் வயது பேதமின்றி சகலரையும் இது தாக்கக் கூடியது என்றும் அவர் கூறினார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY