றகர் போட்டியில் தொடர் வெற்றிகளை குவிக்கும் கண்டி அணி

றகர் போட்டியில் தொடர் வெற்றிகளை குவிக்கும் கண்டி அணி

0
SHARE

டயலொக் கேடயத்திற்கான லீக் றகர் சுற்றுப் போட்டித் தொடரில் இது வரை முடிவடைந்த மூன்று போட்டிகளிலும் 50 ற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பதிவு செய்து கண்டி அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
கடந்த வாரம் இடம் பெற்ற(5.12.2015) இலங்கைப் பொலீஸ் அணியுடனான போட்டியில் 50 – 14 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இது தவிர ஏற்கனவே சீ.ஆர்.என்ட்.எப்.சி. அணியை 80-03 என்ற அடிப்படையிலும், இலங்கை விமானப்படை அணியை 63-12 என்ற அடிப்படையிலும் வெற்றிகொண்டதுடன் இறுதியாக நடந்த போட்டியில் இலங்கை பொலீஸ் அணியை 50-14 என்ற அடிப்படையில் வெற்றி ஈட்டி தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் 50 ற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பொலீஸ் அணியுடனான போட்டியில் நடப்பு வருடச் செம்பியனான கண்டி அணி 7 ட்ரைகளைப் பெற்று அவற்றில் 6 ஐ கோலாக மாற்றியது. ஒரு பென்ல்டி உற்பட மொத்தம் 50 புள்ளிளைப் பெற்றதுடன் பொலீஸ் அணி 2 ட்ரை மற்றும் 1 பெனல்டி மூலம் 14 புள்ளிகளைப் பெற்றது. கண்டி அணிக்கு எதிராக கடந்த மூன்று போட்டிகளிலும் வைக்கப்பட்ட முதலாவது ட்ரை இதுவாகும். மற்ற இரு அணிகளும் எந்த ஒரு ட்ரையை யும் கண்டி அணிக்கு எதிராக வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பொலீஸ் அணி சார்பாக ரிசா முபாறக் ஒரு பெனல்டியை போட அதனை அடுத்து கண்டி சார்பாக தமித் திசாநாயக்க வைத்த ட்ரையை அர்சத் ஜமால்தீன் கோலாக மாற்றி 7-3 என்ற நிலையில் புள்ளிகள் பதிவாகின. பின்கண்டி அணித்தலைவர் பாசில் மரீஜா ஒரு ட்ரையை வைக்க புள்ளிகள் 12.3 ஆக மாறியது.
தொடர்ந்து நைஜில் ரத்வத்தை, ரொசான் வீரரத்ன, பாசில் மரீஜா போன்றவர்கள் மாறி மாறி ட்ரைகளை வைத்தனர். இதில் பாசில் மரீஜா மிகத் திறமையாகத் தொழிற்பட்டு தொடர்ந்து 3 ட்ரைகளை வைத்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நடப்பு வருடச் செம்பியனான கண்டி தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY