கண்டியில் நவோதயம் கல்வி நிறுவனம் உதயம்

கண்டியில் நவோதயம் கல்வி நிறுவனம் உதயம்

0
SHARE

‘படி..படி.. மீண்டும் படி, அதுவே உன்னை உயர்த்தும் படியாகும் என்ற கோசத்துடன் கண்டியில் புதிய கல்வி நிறுவனம் ஒன்று அண்மையில் உதயமானது(6.12.2015)
மாத்தலையில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வந்துள்ளதுடன் ஆரம்ப வகுப்புகள் முதல் உயர்தர வகுப்புக்கள் வரை மேலதிக வகுப்புக்களை நடத்தி பெயர் பெற்ற ஒரு ஸ்தாபனமான நவோதய நிறுவனம் கண்டியில் தனது கிளையை ஆரம்பித்துள்ளது.
கண்டி ஹில் வீதியில் (ஹேமமாலி மகளிர் கல்லூரிக்கு அடுத்ததாக) மாடிக்கட்டிடத்தில் இது இயங்க ஆரம்பித்துள்ளது.
ஆரம்ப வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முறையான கல்வியை வழங்கும் அனுமதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் கண்டியில் நீண்டகாலமாக இல்லாதிருந்தது. சாதாரண மக்கள் நியாயமான கட்டனத்தில் சேவை அடிப்படையும் கலந்த வகையில் சகல தரப்பினருக்கும் கல்வியை வழங்கும் தனியார் நிறுவனமொன்று இல்லாத குறையைப் போக்கி உள்ளதாக மேற்படி நிறுவனத்தின் தலைவர் சத்ய சீலன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-
ஒரு மாணவனுக்கு எது தேவை, எப்பொழுது தேவை, எதற்காகக் தேவை என்ற விடயங்களை கவனத்தில் கொண்டே தமது நிறுவனம் கருமமாற்றுவதாகக் கூறினார். தனது நிறுவனத்தில் பட்டதாரிகள் மட்டும்ல பட்ட மேல் படிப்பு கற்றவர்களைக் கொண்டும் துரைசார் அறிஞர்களைக் கொண்டுமே போதனைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். கல்விக்கு ஒழுக்கம் முக்கியம் என்றும், தமது நிறுவனத்தினுள் ஒழுக்கம் கட்டுப்பாடு என்பன சீராகப் பேணப்படும் என்றும் தெரிவித்தார். நிறுவனத்திற்கு வெளியே நடப்பவைகளுக்கு தாம் பொறுப்பு இல்லை. இருப்பினும் தமது நிறுவனத்தால் உயர்ந்தவர்கள் பலர் இருப்பதை அங்கு சுட்டிக்காட்டினார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY