விபச்சாரத்தை நெருங்காதீர்கள்!

விபச்சாரத்தை நெருங்காதீர்கள்!

0
SHARE

HM NUZRY(hmnuzry@gmail.com)

விபச்சாரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் அது மானக்கேடானதும் ஆபாசமான வழியாகவும் இருக்கிறது. என்று குர்ஆன் எச்சரித்திருந்தும் விபச்சாரத்தின் பக்கம் சமூகம் நெருங்குவதற்கு முதற் காரணியாக இருப்பது. ஆண் பெண் தனிமைச் சந்திப்புகளே!

வாகன ஓட்டுனர்களுடனான தனிமைப் பயணம் கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டு வேளைகள் கருதி பிற ஆடவர்களுடான சந்திப்புகள் கணவனின் சகோதரர்கள் நண்பர்களுடான சந்திப்புகள் என தனிமை சந்திப்புகளை பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம் இத்தனிமை சந்திப்புகளே இறுதியில் மானக்கேடான விபச்சாரத்தின் பக்கம் இட்டுச்செல்கிறது.அதனால்தான் இஸ்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பின்வரும் எச்சரிக்கைகளை விடுக்கிறது

 • (நபி) ஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு ஆண் அண்னியப் பெண்ணுடன் தனித்து இருந்தால் அங்கு நிச்சயமாக மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கிறான். (ஆதாரம்- திர்மிதி)
 • நபி(ஸல்)கூறினார்கள் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வது பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன்.அப்போது அன்சார்களில் ஒருவர் கணவனின் சகோதரர் போன்ற நெருங்கிய உறவினர்களிடம் அப்பெண் செல்லலாமா எனக்கேட்டார். அதற்கு நபி அவர்கள் கணவனின் நெருங்கிய உறவினர்கள் மரணத்தை போன்றவர்களாவர்(அவர்களை மரணத்தை பயப்படுவது போல் பயப்படுங்கள்) என்று கூறினார்கள்(புகாரி,முஸ்லிம்)
  மேற் கூறிய எச்சரிக்கையோடு நின்று விடாமல் ஆண் பெண் தனிமை சந்திப்புகள் ஏற்படாமல் தவிர்க்க இஸ்லாம் பின்வரும் அழகிய வழிமுறைகளை காட்டியிருக்கிறது.
 • நபி(ஸல்) கூறினார்கள் எனது இன்றய நாளிற்கு பிறகு எந்தவொரு தனி மனிதனும் அவனுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்கள் இனைந்தே தவிர கணவன் வீட்டில் இல்லாத பெண்களிடம் செல்ல வேண்டாம்.(முஸ்லிம்)
 • (பிறர் வீடுகளில் அனுமதியுடன் நுழையுங்கள்)-
  நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது.இதனால் பண்படுவீர்கள் அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள் திரும்பி விடுங்கள்’ என்று உங்களுக்கு கூறப்பட்டால்!அதுவே உங்களுக்கு பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவன்(சூரா நூஹ்27.28)

இத் தனிமை சந்திப்புகள் எம்மை விபச்சாரம் எனும் படுகுழியில் தள்ளி இறைநம்பிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 • ஒரு மனிதன் விபச்சாரம் செய்யும் போது அவனுடைய ஈமான் (இறைநம்பிக்கை) அவனை விட்டும் நீங்கிவிடுகிறது. அவ்வேலை முடிந்தவுடன் மீண்டும் திரும்புகிறது. விபச்சாரம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் ஈமான் (இறைநம்பிக்கை) இல்லாதவனாகவே மரணிப்பான்
  ஆதாரம்:-(அபூதாவுத், திர்மிதி)
 • எவன் விபச்சாரம் செய்கிறானோ மது அருந்துகிறானோ அவனை விட்டும் ஈமான்(இறைநம்பிக்கை) நீங்கிவிடுகிறது. அவன் தன் சட்டையை கழற்றுவது போல் ஆகும் (ஹாகிம்)

மேற்கொண்டு விபச்சாரம் என்பது ஈமானை பாதிக்கும் செயலாகவும் இருக்கின்றது. ஆகையால் விபச்சாரத்தை நெருங்கக் கூடிய ஆண் பெண் தனிமை சந்திப்புகளை தவிர்த்து யூசுப் நபியின் இறையச்சத்தை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோமாக

 

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY