பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிச.01 முதல்!

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிச.01 முதல்!

0
SHARE

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் தரம் ஒன்றிலிருந்து கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் உட்பட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படும். 450 ருபாவிலிருந்து 1700 ருபா வரையிலான வவுச்சர்களே இதன் போது வழங்கப்படவுள்ளன.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வவுச்சர் திட்டத்தின் மூலம் பெற்றோர்களும் மாணவர்களும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் படியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் நாட்டிலுள்ள அனைத்து கடைகளிலும் சிறந்த தரமான சீருடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் உள்ளுர் விற்பனையாளர்களும் சிறந்த பலனையடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

News.lk

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY