‌அக்குற‌‌ணையில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறா திருட்டு

‌அக்குற‌‌ணையில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறா திருட்டு

0
SHARE

(வத்துகாமம் நிருபர்)
அக்குறணைப் பிரதேச வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்று பதினையாயிரம் ரூபாய் பெறுமதியுள்ள 17 புறாக்களை திருடியதாகக் கூறப்படும் நான்கு பாடசாலை மாணவர்களை அலவத்துகொடை பொலீஸார் கைது செய்துள்ளனர்.(26.11.2015)
புறாக்கள் திருடப்பபட்ட விடயம் தொடர்பாக பொலீஸாருக்கு கிடைத்த முறைப்பாடை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார் இம் மாணவர்களை கைது செய்துள்ளதுடன் இம் மாணவர்கள் நால்வரும் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் பொலீஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீட்டில் கூடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களைத் திருடி பின்னர் அவற்றை விற்பனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபாவிலும் அதிகமானதாகும் எனத் தெரிவிக்கப் படுகிறது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரையும் கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
2015 11 26

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY