மழைக்காரணமாக மாத்தளை பிரதேசத்தில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மழைக்காரணமாக மாத்தளை பிரதேசத்தில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

0
SHARE

மழைக்காரணமாக மாத்தளை பிரதேசத்தில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தொடர்ந்து பெய்யும் மழைக்காரணமாக மாத்தளை பிரதேசத்தில் 84 குடும்பங்களை சேர்ந்த 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஷமிந்த அமரவீர தெரிவித்தார்.
தம்புளை, நாவுல, பல்லேபொல, யடவத்த பகுதியில் ஐந்து வீடுகள் முற்றாகவும் பத்து வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் யடிகல்பொத்த முகாமிலும் 44 குடும்பங்களை சேர்ந்தவர்கள் புவக்பிடிய முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY