அக்குறனையில் வீடு ஒன்றில் அருக்கப்பட்ட மாட்டை பொலிஸார் கைப்பற்றினர்

அக்குறனையில் வீடு ஒன்றில் அருக்கப்பட்ட மாட்டை பொலிஸார் கைப்பற்றினர்

0
SHARE

வத்துகாமம் நிறுபர்

அக்குறணை குருகொடை பிரதேசதத்pல் வீடு ஒன்றிக்கு அருகாமையில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மாடுடொன்றின் சுமார் 100 கிலோ இறைச்சியையும் அதன் ஏனைய பாகங்களையும் அலவத்துகொடை பொலீஸார்  கைப்பற்றியுள்ளனர்.
பொலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி திடீர் சோதனையை நடாத்திய போதே இவ் ஒரு வீட்டின் பின் புறத்தில் மாட்டை அறுபப்தில் ஈடு பட்டிருந்த ஆறு சந்தேக நபர்களை சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் மூவரை பொலீஸார் கைது செய்துள்ளதுடன் மற்றைய மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
சும்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த மேலும் 10 மாடுகளையும் பொலீஸார் மீட்டுள்ளனர். இம் மாடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது தொடாபாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இம் மாடுகள் திருடப்பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கினறனர். தமது மாடுகள் திருடப்பட்டிருப்பின் தம்முடன் தொடர்பு கொள்ளுமாரும் பொலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் தாம் கைப்பற்றிய 10 மாடுகளையும் அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியையும் (நாளை 16 ம் திகதி) கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY