நாளை இலங்கைக்கு அண்மித்த பகுதியில் மர்ம பொருள் விழும்????

நாளை இலங்கைக்கு அண்மித்த பகுதியில் மர்ம பொருள் விழும்????

0
SHARE

விண்வெளியில் உடைந்த ரொக்கெட் ஒன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் மர்மப்பொருளொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் விழுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

WTF1190F என பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப்பொருள் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு, தென் கடற்பரப்பிலிருந்து 65 கிலோமீற்றர் தூரத்தில் விழக்கூடும் என விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர்.

7 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளிப் பொருள் அப்பலோ விண்வெணி ஆய்வின் கீழ் 40 வருடங்களுக்கு முன்னர் விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட்டின் பாகமென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் இதனை முதன் முதலாக அவதானித்துள்ளனர். பின்னர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கற்றலினா விண்வெணி ஆய்வு மையம் இதனை மீண்டும் கண்டுபிடித்துள்ளது. தற்போது இந்த விண்வெளி மர்பப் பொருளின் பயணப்பாதையை மிக அருகில் அவதானித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி மையத்தின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாறு மர்மப்பொருள் வீழ்வது அரிய சந்தர்ப்பம் என்பதால் உலகின் அவதானம் குவிந்துள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக புகழ்பெற்ற நேச்சர் சஞ்சிகை மூலம் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் டேலி மேல் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை பரவலாக பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்வெளி மர்மப் பொருள் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனை ஹவாய் எனப்படும் பாரிய தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விண்வெளி மர்மப் பொருளினால் இந்த நாட்டு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதென கூறப்படுகின்றது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY