மாணவர்களை நிரப்புவதற்கு பாடசாலைகள் தொழிற்சாலைகள் அல்ல…

மாணவர்களை நிரப்புவதற்கு பாடசாலைகள் தொழிற்சாலைகள் அல்ல…

0
SHARE

வடமேல் மாகாண றோயல்கல்லூரியில் இடம் பெற்ற ஆண்டுப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் அகில விராஜ் காரியவசம்சிறப்புரையாற்றுகையில்

பாடசாலையில் இருக்க வேண்டிய மாணவர்களின் உச்ச எண்ணிக்கை 2000 அல்லது 3000 ஆக இருப்பது மிகவும் நல்லது என்றும், வகுப்பறைகளை அதிகரித்து மாணவர்களை நிரப்புவதற்கு பாடசாலைகள் தொழிற்சாலைகள் அல்ல என்றும், 2020 ம் ஆண்டளவில் ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்துவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

நெடுங்காலமாக நமது நாட்டில் கல்வி இற்றைப்படுத்தப்படவில்லை என்றும், பாடசாலை பாடத் திட்டம் திருத்தப்படவில்லை என்றும், உலகில் வெற்றியடைந்த நாடுகளில் காணப்படும் கல்வியின் தன்மையை அறிந்து, நவீன காலத்துக்குப் பொதருத்தமான வகையில் பாடத் திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு தற்பொழுது தேசிய கல்வி நிறுவகத்துக்கு தாம் அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பிள்ளையையும் தமது பிள்ளையாகக் கணித்து அரப்பணிப்புடன், அக்கறையுடனும் விளக்கமாகவும் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டால் நமது நாட்டில் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY