உலகை அச்சுறுத்தும் செல்பி (selfie)

உலகை அச்சுறுத்தும் செல்பி (selfie)

0
SHARE

‌ஆக்கம்-HM Nuzry

உலகை அச்சுறுத்தும் செல்பி

ஒருவர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்வதுSelfieஎன்று அழைக்கப்படுகிறது.Selfie என்ற வார்த்தை 2013ஆம் ஆண்டு OXFORD அகராதியில் இணைக்கப்பட்ட புதிய வார்த்தையாகும். பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே செல்ஃபிஎடுக்கும் பழக்கம் இருந்து வந்தாலும். அண்மைக்காலமாகவே உலக பிரபலங்கள் தொடக்கம் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் பீடித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் ஓரு ஆய்வரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்

 • ஒரு நாளைக்கு ஓரு இளைஞன் சராசரியாக 14 செல்ஃபிகள்,
 •  பதின்வயதினர் சராசரியாக ஓரு நாளில் 4.7செல்ஃபிகள்,
 •  வயது வந்தவர்கள் ஓருநாளைக்கு 2.4 செல்ஃபிகள் எடுப்பதாவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இன்றுSelfieபிரியர்கள் வினோதமாகவும் விதம் விதமாகவும் தங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது காய்ச்சல் போன்று பரவி வருகிறது.இவ்வாறான செல்ஃபிகள் சில சந்தர்ப்பங்களிள் மனித உயிருக்கே எமனாகிவிடுவதுடன் கூடவே மனித நேயத்தையும் அழித்துவிடுகிறது.இதற்கு பின்வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்

       •  ரஷ்யாவை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் செல்ஃபி மோகத்தால் 9-வது மாடியில் இருந்து குதித்து உயிர் விட்டு உள்ளான்.ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9-வது மாடியில் இருந்து தொங்குவதை செல்ஃபி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்று உள்ளார். குறைவான வெளிச்சம் இருந்ததால் கயிறு அவிழ்ந்து விழுந்தது. மருத்துவமனையில் சேர்க்கபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
       • மலை முகட்டில் நின்று ‘செல்ஃபி’ எடுத்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரகாஷ் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
      • காதலியைக் கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்ட இளைஞர்… சீனாவில்! குன்’ என்ற அடை மொழியுடன் பெயர் கொண்ட அந்த இளைஞர் ‘லின்’ என்ற பெண்ணை உருகி உருகி காதலித்து வந்துள்ளார். காதல் வாழ்க்கையில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று வழக்கம் போல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குன் தனது காதலியைக் கொலை செய்தார். அதன் பின்னர்இ தனது காதலியின் சடலத்துடன் அவர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.
     • செல்ஃபி வெறித்தனத்தின் உச்சகட்டம்…. தாயின் பிணத்தை தோண்டி எடுத்து செல்ஃபி எடுத்த மகன்!பெய்ரூட்: லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்துஇ அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.Picture2
     •  பிரான்சில் முதலாளியின் தலையை வெட்டி அதனுடன் செல்ஃபி எடுத்த தீவிரவாதி பிரான்சில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ரசாயன குடோன் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனது முதலாளியின் தலையை துண்டித்து அத்துடன் செல்ஃபி எடுத்து அதை ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
     • ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் உள்ள பாளம் ஒன்றின் மேல் இருந்து செல்ஃபி எடுக்க முயற்சித்த யுவதி ஒருவர் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தர்.
   •  செல்ஃபி’ எடுக்க முற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் பிரிட்டனில் வசித்த ரோமானிய இளம் பெண் அன்னா உர்சு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில்தனது வித்தியாசமான புகைப்படத்தை பதிவு செய்ய விரும்பினார். அதற்காக தன் 17 வயது நண்பனுடன்லண்டனில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த ரயிலின் மீது இருவரும் ஏறி ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முற்பட்டனர். அப்போதுஇ ரயிலின் மேற்பகுதியில் இருந்த 27 ஆயிரம் வோல்ட் உயர் அழுத்த மின் கேபிளைஇ இருவரும் தெரியாமல் தொட்டு விட்டனர். உடன் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.
   • செல்ஃபி’ படம் எடுத்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. – காவிரி ஆற்றில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் படகில் பயணம் செய்த போதுஅருவி அருகே அதில் ஒருவர் ‘செல்ஃபி’ படம் எடுத்த போதுபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இறந்து போன ஆறு பேரில் 4 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டது.
   • பாலத்தில் நின்று ‘செல்ஃபிபோலாந்து நாட்டை சேர்ந்த 23 வயது சில்வியா ரேச்சல் என்ற இளம்பெண் ஸ்பெயினிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மருத்துவ மாணவியான இவர் புயெண்டெ டி ட்ரியானா பாலத்தில் நின்று ‘செல்ஃபி’ படமெடுக்க முயன்றுள்ளார்.அப்போது கால் இடறி 15 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்து பரிதாபமாக பலியானார்.
       செல்ஃபி மோகம் பலதக்க மனிதரையும் மனிதாபிமானம் இல்லாத மனிதர்களாக மாற்றி வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தின் மையப்பகுதியில் கொடூர விபத்து நடந்த இடத்தில் வாலிபர் ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லண்டனின் மையப்பகுதிக்கு அருகே உள்ள கி406 என்ற பை பாஸ் ரோட்டில் நேற்று மதியம் 3.15 மனியளவில் இரண்டு லாரிகளும் ஒரு காரும் மோதிக் கொண்டது. இதில் காரில் இருந்த இளம்பெண் இறந்து விட்டாரா? என்று அங்கு கூடிய பொது மக்கள் பதைபதைப்புடன் காத்திருந்தனர். உடனடியாக சம்பவ இடத்திர்கு வந்த அவசரகால மீட்புப்படையினர் ஒரு மணி நேரமாக போராடி அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுடன் காரில் வந்த 2 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தால் அந்த பை பாஸ் சாலை பல மணி நேரமாக மூடப்பட்டது. இந்த விபத்துக்கிடையில் விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர்இ தனது ஐபோனில் தன்னோடு விபத்து நடந்த இடமும் கேமராவில் தெரியுமாறு போஸ் கொடுத்தபடிசெல்ஃபி எடுத்துக் கொண்டார்.

3மேற்கொண்டு ரஷ்யாவில் இந்த ஆண்டு மட்டும் செல்ஃபி எடுக்க முயற்சித்த 12பேர் பலியாகி உள்ளனர்.100 இற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் ரஷ்ய அரசு செல்ஃபி பிரியர்களுக்கு வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

f
ஹஜ் யாத்திரையையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம்: இஸ்லாமிய அறிஞர்கள் அதிருப்தி!!

இம்முறை ஹஜ் யாத்திரையை மேற்கொண்டோரில் குறிப்பிடத்தக்களவானோர் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலமாக புகைப்படங்கள் எடுப்பதிலும் குறிப்பாக தம்மைத்தாமே (செல்ஃபி) புகைப்படமெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இரண்டாவது வருடமாக இம் முறையும் யாத்திரிகர்கள் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதானது யாத்திரையின் புனிதத்துக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கஃபாவை வலம் வரும் போது சிலர் திடீரென நின்று செல்ஃபி எடுக்கின்றனர். இது ஏனைய யாத்திரிகர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. உச்சகட்ட ஆன்மிக உணர்வில் நாம் இருக்கும் போது அதற்கு இடையூறு விளைவிப்பதாகவும் கவனத்தை திசை திருப்புவதாகவும் இவர்களது செயல்கள் அமைந்துள்ளன.என டுபாயைச் சேர்ந்த பொறியியலாளரான முஹம்மத் ராஷித் தெரிவிக்கிறார்.இதேவேளை பல இலட்சக் கணக்கான மக்கள் கஃபாவை வலம் வந்து கொண்டிருக்கையில் சிலர் புகைப்படமெடுப்பதற்காக திடீரென ஓரிடத்தில் நிற்பது ஆபத்தானதாகும்.ஏனெனில் மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் சன நெரிசலில் சிக்குண்டு அவர்கள் காயமடையலோ உயிரிழக்கவோ நேரிடலாம்.எனவே செல்ஃபி எடுப்பது உயிராபத்துமிக்கது என பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஹீம் எனும் யாத்திரிகர் குறிப்பிடுகிறார்.(vidivelli)

5மனநோய்
செல்ஃபி பிரியர்கள் சுய நலக்காரர்களாக மாறலாம். அதாவது தன்னலம் உள்ளவர்களாக மாறலாம் என உளவள ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்மேலும் தன்னை பற்றிய சுய மதிப்பீடு குறைந்தவர்களே அதிகம் செல்பி எடுப்பதாகவும்அவர்கள் குறிப்பிடுகின்றனர்.மேற்கொண்டு செல்ஃபி எடுப்பது மனநோய் தான் என்றும் செல்ஃபி பிரியர்கள் தன்னை காட்சிப் பொருளாக காட்ட முற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.இளைஞர் ஒருவர்செல்ஃபியில் தன் தோற்றம் திருப்திகரமாக இல்லாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தனது மானத்தை கூட செல்ஃபி நோயின் மோகத்தால் இழக்கின்றனர்.இது மனநோயின் உச்ச கட்டமாகும் இவ்வாறானவர்கள்உளவள ஆலோசகர்களை நாடுவதே சிறந்தது.
ஆற்றலையும் ஆளுமையையும் குறைக்கும்
செல்பி ஆர்வலர்கள் தான் இருக்கும் சூழல் தன்னுடைய நேரம் எதையும் பற்றி சிந்திக்காமல் முக்கியமான அலுவல்களிகளில் கூட செல்ஃபி எடுக்கின்றனர்.இவ்வாறு எடுப்பவர்கள் தனது அலுவல்களை குறையுள்ளதாக நேரம் கடந்தே செய்து முடிப்பர் இதனால் அவர்களுடைய வேளை கூட பறிபோகலாம்.
ஆகவே செல்ஃபி என்ற போதையில் இருந்து விடுபட்டு மன எழுச்சியுள்ள ஓர் சமுதாயத்தை உருவாக்குவோம்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY