இலங்கையில் இராட்சத நெற்புதர்

இலங்கையில் இராட்சத நெற்புதர்

0
SHARE

கொட்டுக்கச்சி பிரதேசத்தில் 12 அடி உயரம் கொண்ட இராட்சத நெற்புதர் ஒன்று கடந்த ஆறுமாதகாலமாக ஒரு விவசாயின் காணியில் வளர்ந்து வருவதாகத் தெரிய வருகிறது.

ஆனமடுவ கொட்டுக் கச்சி, எத்துல்கொடை என்ற இடத்திலுள்ள வெற்றிலை உற்பத்தியாளரான எம்.தனபால என்பவரது காணியிலே மேற்படி 12 அடி உயரம் கொண்ட நெற்பயிர் தொகுதி ஒன்று வளர்ந்து பலன் தர ஆரம்பித்துள்ளது.

இது பற்றி அவர் தெரிவிக்கையில் தமக்குக் கிடைத்த வித்துக்கள் சிலவற்றை தாம் ஓரே இடத்தில் தூவியதாகவும் பின்னர் அவை முளைக்க ஆரம்பித்து கரும்பு புதர் போன்று கணுக்களைக் கொண்டதாக அது வளர்ந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது அதில் நெற் கதிர்கள் தளிர் விட்டுள்ளதாகவும் அதில் ஒரு கதிர் சுமார் 300 கிராம் அளவில் நிறை கொண்டதாகவும் அவற்றை பறவை இனங்கள் திண்ணபதற்கு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அதனைப் பாதுகாப்பது தமக்கு பாரிய பொறுப்பாக இருப்பதாகவும் வீட்டிலுள்ள பழைய நுளம்பு வளை ஒன்றைப் பயன் படுத்தி அதனை மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY