இலங்‌கையில் பாஸ்மதி ‌அரிசி உற்பத்தி

இலங்‌கையில் பாஸ்மதி ‌அரிசி உற்பத்தி

0
SHARE

தற்போது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசிக்குப் பதில் எமது நாட்டு எமது நாட்டு பாஸ்மதி அரிசி அடுத்தவருடம் பாவனைக்கு வர உள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொகான் விஜேகோன் தெரிவித்தார்.

பேராதனையில் வைத்து அவர் அவர் மேலும் தெரிவித்தாவது-

விவசாயத்திணைக்களம் ‘நிரோகீ சஹல்’ என்ற நீரிழவு நோயாளர்களும் பாவிக்கக் கூடிய பாஸ்மதி கலப்பின அரசியை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இது 2016ம் ஆண்டு பாவனைக்கு வரக்கூடியதாக இது இருக்கும். பத்தலகொடை நௌ; ஆராய்ச்சி நிலையத்தின் வழிகாட்டலில் அம்பலாந்தோட்டையில் ஆய்வு செய்யப்பட்டு அம்பலாந்தோட்டை சிவப்பு கலப்பின அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஹைபிரிட் இனமாகும். நீரிழிவு நோயாளர்களும் பயமின்றி இதனைப் பயன் படுத்தலாம். நீரிழிவைக்கட்டுப் படுத்தும். அதே நேரம் சாதாரண சம்பா போன்ற இனங்கள் நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்ததல்ல. ஆனால் இது அப்படியான தல்ல.

ஈரவலயம், உலர்வலயம், இடைப்பட்ட வலயங்களில் பரீட்சர்hத்தமாக மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி ஆய்வுகள் வெற்றி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுவாக நெற் தாவரங்களைத் தாக்கும் பூச்சி இனங்களின் தாக்கமும் இதற்குக் குறைவாக இருப்பதாகவும் கூறினார்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தே பாஸ்மதி இறக்கு மதி செய்யப் படுவதாகவும் இதன்பின் எமது நாட்டிலே பாஸ்மதி அரிசியை வெற்றிகரமாக சாகுபடி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது போசனைமட்டத்திலும் உயர்ந்ததுவாகும்.

பத்தலகொடை நௌ; ஆராச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி அமிதா பெந்தொட்டையும் இங்கு கருத்து வெளியிட்டார். சாதாரண நௌ; இனங்களைப் போன்று அல்லாது குறிப்பிட்ட விகிதாசாரத்தில் நீர் சேர்கப்பட்ட உற்பத்தி முறை ஒன்று பற்றியும் அவர் அதிகாரிகளுக்கு வழிகாட்டல் மேற்கொண்டார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY