கண்டியில் போலீ நோட்டுக்கள் பொலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கண்டியில் போலீ நோட்டுக்கள் பொலீசார் கைப்பற்றி உள்ளனர்.

0
SHARE

 

 

கண்டி மற்றும் கலகெதரை ஆகிய பிரதேசத்ங்களில் சட்டமுரணாக இயங்கிவந்த இரண்டு போலி செயலகங்கள் மற்றும் போலியாகத் தயாரிக்கப்பட்ட பல நிதியியல் ஆவணங்களை என்பவற்றை பொலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கண்டி பொலீஸ் மோப்ப நாய்ப்பிரிவூ தலைமையகத்திற்கு அண்மையில் ஓரிடமும் கலகெதரை மல்பொலயாய என்ற இடத்தில் இன்னொரு போலி செயலகத்தையூம் பொலீசார் (27.10.2015)கைப்பற்றி உள்ளனர்.
2000 ரூபா முகப் பெறுமதியை உடைய போலீ நோட்டுக்கள் 6 உம்இ 1000 ரூபா முகப் பெறுமதி கொண்ட போலீ நோட்டுக்கள் 19ம் மற்றும் சீட்டிலுப்பில் வெற்றி அடைந்ததாகக் காட்டும் போலீ லொத்தர் சீட்டுக்கள் பலவூம் கைப்பற்றப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
மிக அண்மையில் சீட்டிலிழுப்பில் வெற்றி பெற்ற இலக்கங்களைக் கொண்ட லொத்தர் சீட்டுக்ள் 51ம் போலி பிறப்புச் சான்றுப் பத்திரங்கள் மரண சான்றிதழகள் வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் கல்விச் சான்றிதழ்கள் காப்புறுதிப்ப்ததிரங்கள் சாரதி லைசன்ஸ்கள் போன்ற பல்வேறு ஆவணங்கள் அவ்வாறு அங்கு போலீயாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கலகெதரையில் மேற்கொண்ட தேடுதலில் 48 போலி லொத்தர் சீட்டுக்களும் கண்டியில் 3 போலி லொத்தர் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தொலைக்காட்சியில் சீட்டிழுப்பு முடிவூகள் அறிவிக்கப்பட்ட மறு தினமே போலியாகத் தயாரித்து நாட்டின் நாலா பகுதிகளில் உள்ள முகவர் நிலையங்கள் ஊடாக அவற்றுக்கான பணத்தைப் பெற்றுள்ளனர். அவ்வாறு அச்சிடப்படும் போலி லொத்தர் சீட்டுக்களுக்கான உயர் பெறுமதி 10,000 (பத்தாயிரமும்) ரூபாவிலும் குறைந்த தொகையைப் பெறும் வகையில் அச்சிடப்பட்டு உள்ளதாகவூம் பொலீசார் தெரிவித்தனர்.
மேற்படி போலி ஆவணங்கள் தயாரிப்பிற்காகப் பயன் படுத்திய கணனிகள் பிரிண்டர் ஸ்கேனர் இயந்திரம் சீடிக்கள் போன்ற பல்வேறு உபகரணங்களையூம் பொலீசார் மீட்டுள்ளனர்.
கலகெதரைப் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது கிடைத்த தகவல் ஒன்றின் படியே கண்டியில் தேடுதல் வேட்டை நடந்ததாகப் பொலீசார் தெரிவித்தனர்.

gala-2

 

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY