பாம்புக்கடிக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

பாம்புக்கடிக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

0
SHARE

வெளிநாட்டு இறக்கு மதிக்குப் பதிலாக பாம்புக்கடிக்கு உள்நாட்டு  மருந்து வகை ஒன்றை பாவிக்க  முடியும் என வைத்திய ஆய்வுகள்தெரிவி;க்கின்றன. இவ்வாறு பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் மருத்துவக் குழு ஒன்று பாம்புக்கடிக்கு புதிய மருந்து வகை ஒன்றை இனம் கண்டுள்ளது. மேற்படி பிரிவின் தலைவரான பேராசிரியர் இந்திக கவரம்மான இது பற்றித் தெரிவிக்கையில் தற்போது நாடு முழுவதும் இந்தியாவில இருநது டிறக்குமதி செயயப்பட்டு வரும் ஒருவகை மருந்தே பாவிக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பதிலாக இப்புதிய மருந்தை அறிமுகம் செய்வது தனது அடுத்த முயற்சி என அவர் தெரிவித்துள்ளார். 2016 பெப்ரவரி மாதம் சிகிட்சை ஆய்வு (கிளினிக்கல் ரிஷேச்)  மேற்கொள்ளவதற்கு ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது நாடலாவிய ரீதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மருந்துகளைப் பாவிப்பதற்கு சுமார் ஒரு மில்லியன் அமேரிக்க டொலர்வரை செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தன்னால் கண்டறியப்பட்ட மருந்தை இன்னும் தரமுயர்த்தி அதனைப் பாவிப்பதன் மூலம் மேற்படி பெருந்தொகைப் பணத்தை சேமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY