மைக்ரோசொப்ட் நிறுவனம் சர்பேஸ் புக் என்ற பெயரில் புதிய மடிக்கணனியை அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனம் சர்பேஸ் புக் என்ற பெயரில் புதிய மடிக்கணனியை அறிமுகம் செய்துள்ளது.

0
SHARE

மைக்ரோசொப்ட் நிறுவனம் சர்பேஸ் புக் என்ற பெயரில் புதிய மடிக்கணனியை அறிமுகம் செய்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ‘மேக்புக்’ மடிகணனிக்கு போட்டியாக ‘இம்மடிக்கணனி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டிருந்த மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது முதன்முறையாக மடிக்கணனியை வெளியிட்டுள்ளது.

13.5 அங்குல திரையை கொண்ட சர்பேஸ் புக் மடிக்கணனியானது 267 பி.பி.ஐ. அளவுக்கு மிகத்துல்லியமான பிக்சர் டென்சிட்டியை கொண்டது. வௌ்ளி  உலோகத்தாலும் இந்த மடிகணனி தயாரிக்கப்பட்டுள்ளது.

இண்டெல் ஐ.5, ஐ.7 பிராசசர்களுடன் வெளிவரும் இந்த மடிக்கணனியில் கிராபிக்ஸ் திறன் மற்றும் தொடு திரை வசதியும் காணப்படுகிறது. 700 கிராம் எடையுடைய சர்பேஸ் புக்கின் திரையை விசை பலகையிலிருந்து தனியாக பிரித்து எடுத்துவிட்டு, டேப்லெட்டாக பயன்படுத்தும் வசதியும் காணப்படுகிறது.எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் விற்பனைக்கு வரவுள்ள இம்மடிக்கணனிகளின் ஆரம்ப விலை 1499 அமெ. டொலர்கள் ஆகும்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY